Tuesday, January 25, 2011

விக்கிலீக்ஸ்


அதிர வைக்கும் ரகசியங்களை மீண்டும் வெளியிட்டது "விக்கிலீக்ஸ்" கிழிகிறது அமெரிக்காவின் முகத்திரை


அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் ஏற்கனவே பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பிரபல "விக்கிலீக்ஸ்" இணையதளம்.

இந்நிலையில் தற்போது ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக செயல்பட்டு தங்கள்நாட்டு தலைமைக்கு திரட்டி அனுப்பிய ரகசிய தகவல்களையும் அம்பலப்படுத்தி அமெரிக்காவை வெலவெலக்க வைத்துள்ளது.

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைத்தது, பாகிஸ்தானின் அணு ஆயுத மூல‌ப்பொரு‌ட்களை கை‌ப்ப‌ற்ற மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சி படுதோல்வியில் முடிவடைந்தது என "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள வில்லங்கள் ஏராளமாக அணிவகுக்கின்றன.

சுமா‌ர் 150 உலக நாடுக‌ளி‌‌ல் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் அமெ‌ரி‌க்க தூதர‌க‌ங்க‌ள் நா‌‌ள்தோறு‌ம் வா‌‌ஷி‌ங்ட‌னி‌ல் உ‌ள்ள தலைமை அலுவலக‌த்‌தி‌ற்கு அ‌ளி‌த்து வரு‌ம் தகவ‌ல்களை கை‌ப்ப‌ற்‌றியே, ‌"வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ்" அவற்றை தமது இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின்

ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது "விக்கிலீக்ஸ்"

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் காய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக்கழித்ததாம்.

மேலும் பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்ட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் "விக்கிலீக்ஸ்" அம்பலப்படுத்தியுள்ள தகவலில் இடம்பெற்றுள்ளது.

சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம்." பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்
இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, "அ‌ல்பா டா‌க்" என‌ப்படு‌ம் நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) ச‌ங்கேத பெயராக கு‌றிப‌்‌பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டதும் அதில் அம்பலமாகி உள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்வு உடையவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான்அதிபர் அகமதிநிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியதையும்,பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு "நிர்வாண ராஜா", வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பட்டபெயரும், சங்கேத வார்த்தைகளையும் பயன்படுத்தி தகவல் அனுப்பியதையும் அம்பலப்படுத்தியுள்ளது "விக்கிலீக்ஸ்"

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அம‌ை‌தியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா ம‌ே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த்துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும‌், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வ‌ை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள "விக்கிலீக்ஸ்", அமெரிக்க அரசின் சில இணையதளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் "விக்கிலீக்ஸ்" அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர இந்தியா தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று "விக்கிலீக்ஸ்" தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவு முகத்தை "விக்கிலீக்ஸ்" கிழித்தெறிந்துள்ளதால், ஒட்டுமொத்த உலகநாடுகளும் தங்கள் நாட்டில் முகாமிட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.